அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாகக் கூறப்படும் திருகோணமலை கடற்கரையில் 9 பேர் கைது
கரையோர பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்க்கா ஜனவரி 19 திகதி வரை விளக்கமறியல்.
அனுமதியின்றி புத்தர் சிலை அனுமதியின்றி திருகோணமலை கடற்கரைப் பகுதியில் நிறுவப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 4 புத்த பிக்குகள் உள்ளிட்ட 9 பேர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் எதிர்வரும் ஜனவரி 19 திகதி வரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரையோர பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய தகவலின்படி, இவ் புத்தர் சிலையானது 2025 நவம்பர் 16 ஆம் திகதி அன்று நிறுவப்பட்டுள்ளதாகவும், இது நடைமுறையில் உள்ள கரையோர பாதுகாப்புச் சட்டங்களுக்கு முரணானது எனவும் தெரிவித்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ் முறைப்பாட்டைத் தொடர்ந்து, போதிராஜ விகாரை என அழைக்கப்படும் குறித்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலையை அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்த போது, அங்கு இருந்த புத்த பிக்குகள் உள்ளிட்ட சிலரால் எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் தற்காலிகமாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.ஆகையால்
சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், வழக்கை பரிசீலித்த நீதவான், மேலதிக விசாரணைகள் நடைபெறும் வரை அனைவரையும் ஜனவரி 19 திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.