புனர்வாழ்வு நிலையம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பம்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்.


ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய முழு நாடுமே ஒன்றாக என்ற தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் போதைப்பாவனையாளர்களின் நன்மை கருதி இலங்கையில் தமிழ் மொழியிலான முதலாவதும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலாவது சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் ஹிஜ்ரா நகரில் இன்று (19/01/2026) திங்கள்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த்

தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் கே.கே.எஸ்.கொத்தலாவல கலந்து கொண்டு நிலையத்தை திறந்து வைத்தார். 


இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.எம்.ஹலால்தீன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம் முபாறக், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹீர் , ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வெளிக்கள உதவி பணிப்பாளர் நிலானி அலுத்கே,ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதி திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், ஓட்டமாவடி பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகியவற்றின் கணக்காளர் எம்.ஐ.ஏ.சஜ்ஜாத், வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி. எம். றசாட், மட்டக்களப்பு மாவட்ட பிராத்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரஜா சக்தி தவிசாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


ஆரம்பத்தில் உலவள ஆலோசனை நிலையமாக செயற்படும் இவ் நிலையம் எதிர்காலத்தில் போதைப்பாவனையாளர்களை தங்கவைத்து பயிற்சி வழங்கக்கூடிய நிலையமாக மாற்றப்படும் என்று அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி. எம். றசாட் தெரிவித்தார்.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660