உயர் கல்வி அமைசினால் சர்ச்சைக்குரிய பாடத்தொகுதியை தயாரித்த பொறுப்பான அதிகாரிகள் இடைநீக்கம்
கல்வி மற்றும் உயர் கல்வி அமைசினால் தரம் 06 ஆங்கில பாடப்புத்தகத்திலுள்ள சர்ச்சைக்குரிய பாடத்தொகுதியை தயாரித்த பொறுப்பான அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இவ் முடிவு நேற்று (19) முதல் செயற்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தரம் 06 ஆங்கில தொகுதியில் பொருத்தமற்ற வலைத்தளத்தின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.இது தொடர்பான உண்மைத்தன்மைகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், இரண்டு அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தேசிய கல்வி நிறுவனத்தின் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம் அண்மையில்,(17) நடைபெற்றிருந்தது, அதில் அறிக்கையும் வழங்கப்பட்டது. இதற்கமைய,அறிக்கையில் உள்ள சில விடயங்கள் குறித்து ஆராய நிர்வாகக் குழு இந்த வாரம் மீண்டும் கூட உள்ளது. பாடத் தொகுதிகளில் ஏற்பட்ட சிக்கலுக்கு அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் ஒழுங்கின்மையே காரணம் என்றும் அறிக்கை கூறுகிறது.