தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீதான விசாரணைகள் நிறைவு.
கரூர் கூட்டத்தில் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர் தொடர்பான வழக்கில் குறுக்கு விசாரணை நேற்று (19) நடந்ததையடுத்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீதான விசாரணைகள் நிறைவுற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் த.வெ.க தலைவர் விஜயிடம் சி.பி.ஐ விசாரணைகள் கடந்த நவம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமானது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் திங்கட்கிழமை விசாரணைகள் நடத்தப்பட்டன.கடந்த 12 ஆம் திகதி விசாரணையின் போது, விஜய் அளித்த பதில்களை அடிப்படையாக வைத்து, நேற்றைய தினம் குறுக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.விசாரணைக்காக இரண்டாவது முறையாக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில் நூற்றுக்கும் அதிகமான கேள்விகள் விஜய்யிடம் கேட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன