500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை ஆரம்பம்
பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை தவறாக பயன்படுத்தக் கூடாது என பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பஹலகமவில் அமைந்துள்ள இலங்கை பொலிஸ் அகடமி மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி பொலிஸ்
உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை நிகழ்வில் நேற்று (04) கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், ஊழல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்து, பொறுப்புள்ள சிறந்த பொலிஸ் உத்தியோகத்தர்களாக செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சுமார் 500 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர், பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.