இம்மாதம் லிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை.
2026 ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு (Litro Gas) விலைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என அந்த நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயு விலைகள் சிறிதளவு உயர்வு கண்டிருந்தாலும், நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு விலையை அதிகரிக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.