உள்நாடு
Jan 08, 2026
அனர்த்தங்களால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கி, புதிய வீடுகளை நிர்மாணிக்கும
அனர்த்தங்களால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்கல் மற்றும் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம், எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
10 ஆவது பாராளுமன்றத்தின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று (07) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, ஜனாதிபதி மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.