சுற்றாடல் பாதுகாப்பு உறுதியானால் அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்திற்கு பச்சை விளக்கு
சுற்றாடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக முன்வைக்கப்பட்ட பல்வேறு முறைப்பாடுகளின் அடிப்படையில், குறித்த திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும், அதனை மீண்டும் தொடங்குவதற்கு முன் சுற்றாடல் தாக்கம் தொடர்பான முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும்
அம்புலுவாவ பகுதியில் நேரடி கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்காது என வலியுறுத்தினார்.இந்த விஜயத்தின் போது கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன, முன்மொழியப்பட்ட கேபிள் கார் திட்டம் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா வளர்ச்சிக்கு இது முக்கிய பங்காற்றும் என்றும் தெரிவித்தார்.