உள்நாடு
Feb 05, 2026
இம்மாத இறுதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு விஜயம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, டெல்லியில் நடைபெறவுள்ள AI Impact என்ற சர்வதேச உச்சிமாநாட்டில் அவர் கலந்துகொள்ளவுள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலப் பாதிப்பு தொடர்பான விவாதங்களில் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் இந்த தகவலை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலன்னே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்த விஜயம் இலங்கை இந்தியா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான சந்தர்ப்பமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.