உள்நாடு
Feb 07, 2026
நாடு முழுவதும் லாப்ஸ் எரிவாயு புதிய விலைகள் நடைமுறை
நேற்று(06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் கொள்ளளவு கொண்ட லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் 4,250 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த சிலிண்டர், புதிய விலை திருத்தத்தின் பின்னர் 4,330 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 5 கிலோகிராம் எடையுடைய லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் 32 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அந்த சிலிண்டரின் புதிய சில்லறை விலை 1,742 ரூபாவாக அமையும்.இந்த விலை திருத்தம் நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.