அர்ச்சுனா எம்.பியின் அவதூறு பிரசாரங்களுக்கு தற்காலிக தடை !
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மீது பாராளுமன்ற உறுப்பினர் அவதூறு பரப்பல்: நீதிமன்றம் இடைக்கால தடை விதிப்பு
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் அனுமதியின்றி அவரது அலுவலகத்திற்கு வந்து, அவதூறு வார்த்தைகளைப் பயன்படுத்தி கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்காளி சார்பில் சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல் குருபரனும், எதிராளி சார்பில் சட்டத்தரணி கௌசல்யாவும் ஆஜராகினர். இருதரப்பினரும் இணக்கப்பாடு அடைந்ததைப்பொறுத்து, யாழ்.நீதிமன்றம், இந்த வழக்கு முடிவுறும் வரை, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பொது வெளியில் வைத்தியசாலை பணிப்பாளரை அவதூறு செய்ய தடையிட்டது.