சமையல் எரிவாயு விலை நிலை,லிட்ரோ அறிவிப்பு
2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த சில மாதங்களாக லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் மாற்றமின்றி தொடர்ந்துவரும் நிலையில், அதே நிலைமை பெப்ரவரி மாதத்திலும் தொடரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள விலைகளின் படி,
12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 3,690
5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 1,482
2.3 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 694
என்ற விலைகளில் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பு, பொதுமக்களுக்கு ஒரு நிம்மதியான செய்தியாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.