காணி துப்பரவு செய்யும் போது அதிர்ச்சி
களுத்துறை சென்ட்ரல் சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள பெரக்கும் மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில், சந்தேகத்திற்கிடமான மோட்டார் குண்டுகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடு அமைப்பதற்கான பணிகளுக்காக குறித்த காணியை துப்பரவு செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, இந்த மோட்டார் குண்டுகள் வெளிப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து, உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்றுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட உள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.