பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகத்துக்கு எதிரான புகார் விசாரணைக்கு
இடைநீக்கம் செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை விசாரிக்க, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, சபாநாயகருக்கு எதிராக சமிந்த குலரத்ன தாக்கல் செய்த முறைப்பாட்டையும், அதே ஆணைக்குழு விசாரணைக்கு எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனடிப்படையில், இரு தரப்புகளிடமிருந்தும் முன்வைக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக தனித்தனியாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட தரப்புகளிடமிருந்து தேவையான விளக்கங்கள் மற்றும் ஆவணங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசாரணைகள், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றும் ஆணைக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.