சிவப்பு அறிவிப்பின் மூலம் குற்றவாளிகளை நாட்டுக்கு அழைக்கும் நடவடிக்கை
வெளிநாடுகளில் தங்கியிருந்து சட்டத்தைத் தப்பித்துக் கொண்டிருக்கும் 103 குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, இன்டர்போல் ஊடாக சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு அறிவிப்புகளின் அடிப்படையில், இதுவரை மூன்று குற்றவாளிகள் வெற்றிகரமாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.மேலும், கடந்த ஆண்டில் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த நபர்களிடமிருந்து சுமார் 50 மில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.