கொழும்பு கண்டி பிரதான வீதியில் விபத்து.
கொழும்பு கண்டி பிரதான வீதியின் கேகாலை பகுதியில் உள்ள 85வது மைல்கல்லுக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 22வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லோறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இலங்கை போக்குவரத்து சபை பஸ் மற்றும் தனியார் பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் லோறி சாரதி, இரண்டு உதவியாளர்கள் மற்றும் ஐந்து பயணிகள் காயமடைந்து கேகாலை மற்றும் மாவனெல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.