தாழ் அமுக்கம் மேலும் நலிவு..
மன்னார் வளைகுடாவிற்கு மேலாக காணப்பட்ட தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் நலிவடைந்து வருவதால், நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக வளிமண்டலவியல் தினைக்களம் அறிவித்ள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் சிறிய அளவிலான மழைக்கு வாய்ப்பு உள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் அதிகாலை பனி மூட்டம் காணப்படலாம்.பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் எற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை கடல் பிராந்தியங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ரத்து. எனினும் புத்தளம், மன்னார்,காங்கேசன்துறை கடல் பகுதிகளில் மணிக்கு 50-55கி. மீ. வரை காற்று வீசக்கூடும், கடல் கொந்தளிப்பாக இருக்கலாம்.
📌 WhatsApp Group:
https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP
📢 WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83K
👍 Facebook Page:
https://www.facebook.com/share/1CGgrzvf4y/
🌐 Website: https://eastmirror.lk
👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!