ஈரானில் 13நாட்களாக மக்கள் கிளர்ச்சி, கடுமையான ஒடுக்குமுறை ஏச்சரிக்கை.
அதிகரிக்கும் பணவீக்கம்,விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை காரணமாக,ஈரான் முழுவதும் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.
31 மாகாணங்களில் உள்ள 100 நகரங்களில் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பாதுகாப்பு படைகள் களமிறக்கப்பட்டு பெருமளவு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்கிடையில், ஈரான் அட்டார்னி ஜெனரல் முகமது மோவாஹிதி ஆசாத்,போராட்டக்காரர்கள், கலகக்காரர்கள், சூறையாடுபவர்கள் மீது கடுமையான, விரைவான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எந்த கருணையும் இல்லை என அரசு தொலைக்காட்சியில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் கடவுளுக்கு எதிராக போர் செய்பவர்களாக கருதப்படுவர் எனக் கூறி, மரண தண்டனை உட்பட கடும் தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுள்ளது.
📌 WhatsApp Group:
https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP
📢 WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83K
👍 Facebook Page:
https://www.facebook.com/share/1CGgrzvf4y/
🌐 Website:https://eastmirror.lk
👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!