இலங்கை தபால் திணைக்களம் இலாப பாதையில் – 13,100 மில்லியன் ரூபாய் வருவாய் சாதனை
ஒருகாலத்தில் இழப்பில் இயங்கியதாக பேசப்பட்ட இலங்கை தபால் திணைக்களம், இன்று இலாபம் ஈட்டும் அரசுத் துறையாக மாறியுள்ளது.2025 ஆம் ஆண்டிற்காக திறைசேரி நிர்ணயித்திருந்த வருமான இலக்கை மீறி, தபால் திணைக்களம் 13,100 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.இந்த வெற்றியின் பின்னணியில், தபால் சேவையை நவீனமயமாக்கும் பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த வருடத்தில் புதிய ஊழியர் ஆட்சேர்ப்புகள், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிரந்தர நியமனங்கள் மற்றும் புதிய தபால் அலுவலகங்கள் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக, 378 பிரதி தபால் மா அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதேபோல், 2022க்கு பின்னர் 1000 தபால் உதவியாளர்களின் நியமனங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன, மேலும் 600 புதிய தபால் சேவை அதிகாரிகள் விரைவில் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.பொது மக்களுக்கு வேகமான மற்றும் திறமையான சேவையை வழங்கும் நோக்கில்,225 கணினிகள், 1500 மடிக் கணினிகள், 500 அச்சுப்பொறிகள் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில்,10 புதிய பெரிய லொரிகள், 20 கெப்ரக வாகனங்கள் கொள்வனவு செய்யப்படுவதுடன்,மின்சார தொழில்நுட்பத்தின் கீழ் 20 மின்சார சரக்கு முச்சக்கர வண்டிகள் மற்றும் 165 மின்சார மோட்டார் சைக்கிள்கள் வாங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதற்கு மேலாக, பொலன்னறுவை புதிய தபால் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன்,தபால் தலைமையகம், மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம், பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு தபால் வளாகங்களில் சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
📌 WhatsApp Group:
https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP
📢 WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83K
👍 Facebook Page:
https://www.facebook.com/share/1CGgrzvf4y/
🌐 Website: https://eastmirror.lk
👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!