தை பொங்கலுக்கு யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மக்கள் நிகழ்வுகளில் நேரடி பங்கேற்பு.
தை பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பொங்கல் விழாக்கள் உட்பட பல மக்கள் தொடர்புடைய நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
ஜனவரி 15 – தைப்பொங்கல் தினம்
மதியம் 2 மணியளவில், ஜனாதிபதி வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு மக்களுடன் பண்டிகை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்.இதனைத் தொடர்ந்து, மாலை 4 மணியளவில் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் பொங்கல் நிகழ்விலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
ஜனவரி 16
காலை 9 மணியளவில், மீசாலை ஆரம்ப பாடசாலையில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டு, வீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காசோலைகளை நேரடியாக வழங்கவுள்ளார்.அதே நாளில், மதியம் 2 மணியளவில் கொக்குவில் தொழிநுட்ப கல்லூரி மைதானத்தில்,“முழு நாடும் ஒன்றாக” எனும் தலைப்பில் நடைபெறும் போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.
பண்டிகை கொண்டாட்டத்திலும், சமூக பொறுப்பிலும் மக்களுடன் இணையும் இந்த விஜயம், யாழ்ப்பாண மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
📌 WhatsApp Group:
https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP
📢 WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83K
👍 Facebook Page:
https://www.facebook.com/share/1CGgrzvf4y/
🌐 Website: https://eastmirror.lk
👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!