இடியுடன் கூடிய கனமழை அபாயம், பல மாகாணங்களுக்கு எச்சரிக்கை
இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், பிற்பகலில் நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை ஏற்படலாம்.கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று, மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றதால் பொது மக்கள் அவதானத்துடன் செயட்படுமாறு அறிவிக்கப்படுள்ளது.மேலும் மேற்கு, மத்திய, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை பகுதிகளில் அதிகாலை வேளை பனிமூட்டமாக காணப்படும்.சில கடற்பரப்புகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை மாலை அல்லது இரவு வேளையில் பெய்ய வாய்ப்புள்ளது. சிலாபம்,மன்னார்,காங்கேசன்துறை மற்றும் காலி ,ஹம்பாந்தோட்டை, சில கடற்பரப்புகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்றும் பொத்துவில் கடற்பரப்புகளில்
காற்றின் வேகம் மணிக்கு 45 கி.மீ வரை அதிகரிக்கலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.ஆகவே மீனவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
📌 WhatsApp Group:
https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP
📢 WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83k
👍 Facebook Page:
https://www.facebook.com/share/1CGgrzvf4y/
🌐 Website: https://eastmirror.lk
👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!