அம்மா இல்லாத உலகம்
அம்மா இல்லாத உலகம்
நான் ஒரு நாய்க்குட்டியைக் கொண்டுவந்தபோது நாய்க்குட்டியின் அம்மா இல்லாமல் குட்டி நாய் எப்படி சாப்பிடும் என்று கேட்டாள் அம்மு
நான் ஒரு பூனைக்குட்டியை
கொண்டுவந்தபோது பூனைக் குட்டியின் அம்மா இல்லாமல் குட்டிப் பூனை எப்படித் தூங்கும் என்று கேட்டாள்
நான் ஒரு கிளிக்குஞ்சைக் கொண்டுவந்தபோது கிளிக்குஞ்சைக்
தேடி அம்மா கிளி வரும்தானே என்று கேட்டாள்
நான் மீன் குஞ்சைக் கொண்டுவந்தபோது மீனின் அம்மாவை நினைத்து குட்டி மீன் அழாதா என்று கேட்டாள்.
-அந்நிய நிலத்தின் பெண்-
📌 WhatsApp Group:
https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP
📢 WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83k
👍 Facebook Page:
https://www.facebook.com/share/1CGgrzvf4y/
🌐 Website: https://eastmirror.lk
👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!