தனிநபர் தலையீடு குறைப்பு, டிஜிட்டல் அட்டை மூலம் அரச எரிபொருள் விநியோகம்

ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் டிஜிட்டல் அட்டை (Digital Card) முறைமையை அறிமுகப்படுத்துதல் ஆகும். இந்த புதிய முறையின் மூலம், வாகனங்களுக்குத் தேவையான எரிபொருளுக்கான கட்டணம் இணையவழி வங்கி முறைமை ஊடாக செலுத்தப்படுவதுடன், தனிநபர் தலையீடுகள் குறைக்கப்பட்டு தெளிவான மற்றும் வினைத்திறனான விநியோகம் உறுதி செய்யப்படும். இலங்கை வங்கியும் பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ள இந்த டிஜிட்டல் அட்டை முறைமை முதற்கட்டமாக ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களுக்கு பரீட்சார்த்தமாக அமுல்படுத்தப்படவுள்ளதுடன், அதன் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு ஏனைய அரச நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.


Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660