இரு மோட்டார் சைக்கிள்கள் மோதல், புத்தளத்தில் இருவர் உயிரிழப்பு
புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (13) இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த இரு சைக்கிள் ஓட்டுநர்கள் இருவரும் சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளார். மேலும், காயமடைந்த பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் இருவரும் சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.