யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் தினநிகழ்வுகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்பு.
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, எதிர்வரும் நாளை (15) யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பல்வேறு மக்கள்சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி, நாளை பிற்பகல் 2.00 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மாலை 4.00 மணியளவில் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெறும் மற்றொரு பொங்கல் நிகழ்விலும் அவர் பங்கேற்க உள்ளார்.இதனைத் தொடர்ந்து, ஜனவரி 16ஆம் திகதி காலை 9.00 மணியளவில் மீசாலை ஆரம்ப பாடசாலையில் நடைபெறும் வீட்டு திட்டப் பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணியளவில், கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் “முழு நாடும் ஒன்றாக..” என்ற தலைப்பிலான போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.