முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோர் மீது ஊழல் வழக்கு,பெப்ரவரி 10க்கு அழைப்பு
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, வழக்கின் மேலதிக நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியதாகவும், அதனூடாக ஊழல் செயல்களில் ஈடுபட்டதாகவும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.