அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு நிதி வழங்குதல்

திட்வா சூறாவளி பாதிப்பின் காரணமாக பாடசாலைகள் மற்றும் மாணவர்கள் எதிர்கொண்டுள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் மத்திய அரசாங்க நிதியினால் வழங்கப்படும் நிதி உதவி திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ரூ. 10,000 என நிதி கொடுப்பனவு வழங்கத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

மேலும், அரசாங்கத்தின் முன்னொரு கொடுப்பனவு திட்டத்தில் ரூ. 15,000 பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.ஆகவே

கடந்த வரவு செலவுத் திட்டத்தின் படி, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவருக்கும் ரூ. 25,000 அளவிலான கூடுதல் நிதி உதவி வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை, மாணவர்கள் கல்வியில் தொடர்ந்து முன்னேறவும், சூறாவளி அனர்த்தத்தின் தாக்கங்களை சமாளிக்கவும் உதவியாக இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660