காகம் பற்றி அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல்கள்.

தினமும் நம் அன்றாட வாழ்வில் பார்க்கக்கூடிய ஒரு சாதாரண உயிரினமாக தான் காகத்தை நினைத்திருப்போம் ஆனால் அறிவியலாளர்களால் காகம் பற்றி கண்டுபிடித்த அதிர்ச்சி தரும் அறிவியல் ரீதியான உண்மைகள்.

*1.மனித முகங்களை நியாபகத்தில் வைத்திருக்கக்கூடியது*

காகங்கள் ஒருவருடைய முகத்தை பல வருடங்கள் ஆனாலும் நினைவில் வைத்திருக்கும் வல்லமை வாய்ந்த பறவையாகும். அதுமட்டுமில்லாமல் தனக்கு யாராவது தீங்கு செய்து இருந்தால் மற்ற காகங்களுக்கு அந்த நபரை ஒரு "ஆபத்து " என அடையாளம் காண்பித்து எச்சரிக்கை விடுக்கும்.


*2.புத்திசாலிதனத்தில் சிறுவர்களின் புத்திகூர்மைக்கு நிகரானவை.*

ஒரு 5 தொடக்கம் 7 வயது சிறுவர்களுக்கு எவ்வளவு அறிவுத்திறன் இருக்குமோ அதே அளவு காகங்களுக்கும் உண்டு. புதிர்களை தீர்ப்பது, கருவிகளை பயன்படுத்துவது இவைகளுக்கு சாதாரணமானது.


*3.கருவிகளை உருவாக்ககூடிய பொறியியளாளர்.*

உணவை எடுப்பதற்காக குச்சி, இலை மற்றும் கம்பி போன்றவற்றை எவ்வாறு வளைத்து பயன்படுத்த வேண்டும் என்று அதற்கு தெரியும். அதுமட்டுமில்லாமல் மனிதர்களுக்கு அடுத்ததாக கருவிகளை தாங்களே உருவாக்கி பயன்படுத்தும் திறமை படைத்தவை.


*4.காகங்களின் இருதிச்சடங்கு.*

ஒரு காகம் இறந்துவிட்டால் மற்ற காகங்கள் அதைச் சுற்றி நின்று சத்தமிடுவதை பார்த்திருப்போம். அது வெறும் அழுகை மட்டுமல்ல; அந்த காகம் எப்படி இறந்தது?, அங்கு என்ன ஆபத்து இருக்கிறது? என்பதை விவாதிக்கக்கூடிய ஒரு சமூகக் கூட்டமுமாகும்.


*5.எண்ணிக்கைகளில் திறமை வாய்ந்தவை.*

காகத்திற்கு 1 முதல் 5 வரை எண்ணும் ஆற்றல் உண்டு மேலும் பொருட்களின் எண்ணிக்கையை வைத்து வேறுபாடுகளை கண்டறியும் ஆற்றல் உள்ளவை.


*6. பேசக்கூடிய திறமை உள்ளவை.* 

பச்சைக்கிளிகளை போலவே காகத்தாலும் மனிதகுரலை பின்பற்றி பேச முடியும். இது அரிதான விடயம் தான் ஆனாலும் சாத்தியமானது.


*7.பழிவாங்கும் குணம் உள்ளவை.*

காகம் மிகவும் ஞாபக சக்தி உள்ள பறவையாகும். யாராவது தீங்கு செய்தால் அவர்களை எளிதில் மறக்காது தக்க சமயம் பார்த்து, பல வருடம் கழித்து கூட தாக்க முயற்சிக்கும்.


*8.விளையாட்டுத் தனமானவை.*

பனியிலும் மற்றும் உயர்ந்த இடங்களில் இருந்தும் பொருட்களை வீசி விளையாடும் பழக்கம் உள்ளவை.


*9.சிறந்த குடும்பப்பாசம் உள்ள பறவை.*

குடும்பப்பாசம் மிக அதிகம் உள்ள இப்பறவையானது தன் வாழ்நாள் முழுவதும் ஓரே துணையுடன் வாழ்ந்து தங்கள் குஞ்சுக்களையும் நீண்ட காலம் நன்றாக கவனிக்ககூடியவை.


*10.சூழலின் சமநிலைக்கு முக்கிய பங்கு வகிக்கும் பறவை.*

இறந்த விலங்குகள் மற்றும் குப்பைகளை உற்கொள்வதன் மூலம் நோய் பரவலை தடுத்து சூழலை சமநிலையில் வைத்திருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் "இயற்கையின் துப்பரவு பணியாளர்" என்றும் அழைக்கப்படும்.


*முடிவு*

காகம் என்பது ஒரு சாதாரண பறவை மாத்திரமல்ல; அது அதிக அறிவுக்கூர்மை உள்ள, சமூக உணர்வு கொண்ட மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அதிசய உயிரினமாகும்.காகங்களின் இந்த அறிவியல் ரீதியான தகவல்கள் மூலம் இயற்கையின் ஒவ்வொரு உயிரினமும் எவ்வளவு தனித்துவமானது என்பதை உணர முடிகிறது.

Share this article:
AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660