பாதணி வவுச்சர் திட்டம் கால எல்லை பெப்ரவரி 28 வரை நீடிப்பு
2026ஆம் ஆண்டிற்காக தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் இல்லற மற்றும் துறவற மாணவர்கள், அதேபோல் சீலமாதாக்கள் ஆகியோருக்காக வழங்கப்பட்டுள்ள ரூ. 3,000 பெறுமதியான பாதணி வவுச்சர்களின் பயன்பாட்டு காலம் நீடிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, இந்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் இந்த மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது. எனினும், பலர் இன்னும் வவுச்சர்களைப் பயன்படுத்த முடியாமல் இருப்பதை கருத்தில் கொண்டு, அதன் கால எல்லை தற்போது பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இதுவரை வவுச்சரை பயன்படுத்தாத மாணவர்கள் மற்றும் பயனாளிகள் தங்களுக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் சென்று குறிப்பிட்ட பெறுமதிக்குள் பாதணிகளை பெற்றுக்கொள்ளலாம்.பயனாளிகள் புதிய காலக்கெட்டுக்குள் வவுச்சரை பயன்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.