தேசிய கல்வி நிறுவகத்தின் ஒரு உயர் அதிகாரி உள்ளிட்ட மூவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாட மொடியூல் (Module) தொடர்பாக, தேசிய கல்வி நிறுவகத்தின் ஒரு உயர் அதிகாரி உள்ளிட்ட மூவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ் முடிவானது
அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் ஒழுங்கின்மையே இதற்கான காரணம் என்று முதல் அறிக்கையின் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து எடுக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் இது தொடர்பான முடிவுகளை எடுக்க அதிகாரம் கொண்ட தேசிய கல்வி நிறுவகத்தின் நிர்வாகக் குழுவினால் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான கலாநிதி தர்ஷன சமரவீர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.அத்துடன் அந்நிறுவகத்தின் மேலும் இரண்டு பெண் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.முன்னதாக, இது தொடர்பான விசாரணை முடியும் வரை தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்திருந்தார்.இவ்வருடம் புதிதாக அறிமுகப்படுத்தப்படவிருந்த ஆங்கில மொழி தொகுதியில் பொருத்தமற்ற இணையத்தளம் ஒன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தமையே சர்ச்சைக்குறிய காரணமாக அமைந்திருந்தது. இது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அதன் விநியோகத்தை இடைநிறுத்துவதாக கல்வி அமைச்சகம் அறிவித்தது. மேலும் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடொன்றை அளித்திருந்தார். அதனை தொடர்ந்து, தரம் 6 தொடர்பில் முன்மொழியப்பட்ட கல்வி மறுசீரமைப்பை செயற்படுத்துவது 2027 வரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இவ் முடிவானது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.