கல்லந்தென்ன பிரதேசத்தில்,பெறுமதிவாய்ந்த இரத்தினக் கல்லொன்று கண்டெடுப்பு.

நாட்டில் அண்மையில் ஏற்பட்டிருந்த இயற்கை அனர்த்தத்தில் சேதமடைந்த தெல்தோட்டை கல்லந்தென்ன கீழ் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதேசத்தில்,அதிக எடையுள்ள மிகப் பெறுமதியான இரத்தினக் கல்லொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.கோயிலின் அருகில் ஏற்பட்டிருந்த மண்சரிவிக்குள் பல்வேறு வர்ணங்களில், கல்லொன்று மின்னுவதை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.இது குறித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே கலஹா பொலிஸார் இக்கல்லை கண்டெடுத்தனர்.மேலும் இப்பகுதியில் ஏற்பட்டிருந்த மண்சரிவில்,கோயிலுட்பட பல வீடுகளும் கடுமையாக சேதமுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.இக் கோயிலை புனர் நிர்மாணம் செய்வதற்கு தோட்ட மக்கள் 2010 ஆம் ஆண்டு முதல் நிதி சேகரித்து வந்திருந்த நிலையில்,பல சிரமங்கக்கு மத்தியில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கும்பாபிஷேகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவ் கோயிலானதது அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தில் மீண்டும் சேதமடைந்தது. இதையிட்டு தோட்ட மக்கள் மிகுந்த கவலையடைந்திருந்த நிலையிலேயே, மேற்படி அரிய இரத்தினக்கல் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.மேலும் கலஹா பொலிஸார் குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்


Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660