இன்று அரசாங்க பாடசாலைகளின் முதல் ஆண்டானது ஆரம்பமாகின்றது.
2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைககளின் ஆண்டு விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைவாக இன்று அரசாங்க பாடசாலைகளின் முதல் ஆண்டானது ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாம் தவணையின் ஆரம்ப கட்டம் இன்று முதல் பெப்ரவரி 13 வரை நடைபெறும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.பெப்ரவரி 14 முதல் மார்ச் 02 வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 03 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறவுள்ளது.மேலும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்,புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், தரம் 06 ஆங்கிலப் பாட தொகுதியில் கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் உரிய முறைமையின்றி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது, இதனை தேசிய கல்வி நிறுவகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு மூலம் கண்டரியப்பட்டுள்ளது எனவும் இந்த விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு அமைய தேசிய கல்வி நிறுவகத்தின் இரண்டு பெண் அதிகாரிகளின் சேவையை இடைநிறுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.