41-வது உலக விவாகமானோர் அழகிப் போட்டியில் இம்முறை திருமதி சபினா யூசுப்
41-வது உலக விவாகமானோர் அழகிப் போட்டி (Mrs. World) இம்முறை அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இவ் நிகழ்ச்சியில் இலங்கையைப் முன்னிலைப்படுத்தி கலந்து கொள்வதற்காக, திருமதி சபினா யூசுப் இன்று (21) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.மேலும் திருமதி சபினா யூசுப்பை வாழ்த்துவதற்காக, இந்த நிகழ்ச்சியின் தேசிய பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க, தேசிய பயிற்சியாளர் ருக்மால் சேனநாயக்க, மொழி மற்றும் ஆளுமைத் திறன் பயிற்சியாளர் தாரக்க குருகந்த மற்றும் கடந்த 2024-ஆம் ஆண்டு உலக விவாகரமானோர் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் (Runner-up) பெற்ற இஷாதி அமந்தா உள்ளிட்ட சபினாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.