இலங்கைக்கு 100 நவீன மின்சார சொகுசுப் பேருந்துகளை வழங்குவதற்கு சீனா நடவடிக்கைகளை
இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென்ஹொங் (Qi Zhenhong) இலங்கைக்கு 100 நவீன மின்சார சொகுசுப் பேருந்துகளை வழங்குவதற்கு சீனா விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இவ் பேருந்தின் மூலம் எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல் மாசடைவைது குறையும் ஆகவே சுற்று
சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வாறு வழங்கப்படவுள்ள ஒரு பேருந்தின் பெறுமதி சுமார் 225,000 அமெரிக்க டொலர்கள் எனவும் தூதுவர் மேலும் தெரிவித்தார். நேற்று மல்வத்து பிரிவின் மகாநாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய திப்பொட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் மற்றும் அஸ்கிரி பிரிவின் மகாநாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்ற போதே சீனத் தூதுவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்