உறுதி அளித்த தீர்வுகள் நடைமுறைக்கு வராததால் அரச வைத்தியர்கள் மீண்டும் போராட்டப் பாதையில்..
இன்று முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலையில் பணி புரியும் அரச வைத்தியர்கள் அனைவரும் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்த உள்ளனர். இதற்கு காரணம்
சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆகும். இவ் அறிவிப்பை நேற்று பிற்பகல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.மேலும் நாடு முழுவதிலும் கடந்த இரண்டு நாட்களாக அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், தாம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பினை நேற்று காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர். இருந்த போதிலும் இன்று முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க போவதாக தெரிவித்துள்ளனர்.