பொதுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் இலங்கை,சீனா இருதரப்பு கலந்துரையாடல்

28 ம் திகதி புதன் கிழமை பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சில் வளாகத்தில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் நிகழ்வை அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமை தாங்கினார்.மேலும் இவ் நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹாங் (Qi Zhenhong) தலைமையிலான தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர்.இவ் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பாராட்டியதுடன், பொதுப் பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்கம், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் திட்டமிட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்தல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும் இதன்போது இலங்கையின் பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சீன மக்கள் குடியரசு வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு அமைச்சர் ஆனந்த விஜேபால தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த சீனத் தூதுவர் கி சென்ஹாங், இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும், பொதுப் பாதுகாப்பை மேம்படுத்தவும் சீன அரசாங்கம் தொடர்ச்சியான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாக உறுதியளித்துள்ளார். மற்றும் இந்நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் சீனத் தூதுக்குழுவின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660