சிறுவர்களின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசுக்கு ஆதரவு

சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வரவேற்றுள்ளது.முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தருமான துமிந்த திசாநாயக்க இது குறித்து தெரிவிக்கையில், மனநலம் மற்றும் சமூக நடத்தை குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பொது மக்கள் தற்போது பயணங்களின் போது அல்லது குடும்ப இரவு உணவு மேசையில் கூட ஒருவருக்கொருவர் பேசுவதில்லை. அனைவரும் தங்கள் தொலைபேசிகளில் கவனம் செலுத்துகிறார்கள்.இது குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் செயல் என்றும் அவர் கூறினார். வளர்ச்சியடைந்த நாடுகள் பல சிறார்களுக்கான திரை நேரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன என்றும் திசாநாயக்க குறிப்பிட்டார்.

அரசில் கட்சி என்ற ரீதியில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை நாங்கள் வரவேற்கிறோம். மற்றும் குழந்தைகள் இந்த தளங்களைத் தவறாகப் பயன்படுத்திய பல சந்தர்ப்பங்கள் உள்ளன. இந்த பிரச்சினையில் சரியான நடவடிக்கை எடுக்குமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660