இலங்கையில் தங்க விலை திடீர் வீழ்ச்சி
உலக சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் உள்நாட்டு தங்கச் சந்தையிலும் திடீர் விலை குறைவு பதிவாகியுள்ளது.
தங்கச் சந்தை தரவுகளின்படி, உள்நாட்டில் தங்கத்தின் விலை சுமார் ரூ. 20,000 வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும்
இதற்கமைய, இன்று காலை கொழும்பு செட்டியார் தெருவில் வெளியிடப்பட்ட விலை நிலவரத்தின் படி, 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை ரூ. 368,000 வரை குறைவடைந்துள்ளது. நேற்றைய தினம் இந்த விலை ரூ. 386,400 ஆக பதிவாகியிருந்தது.அதேபோன்று, நேற்று ரூ. 420,000 ஆக காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை, இன்று ரூ. 400,000 வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலக சந்தை நிலவரம் மற்றும் நாணய மாற்று மதிப்பின் தாக்கம் காரணமாக, தங்க விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.