கடல் உயிரின பாதுகாப்பில் கடற்படையின் பங்கு, கல்லடிச்சேனை சம்பவம்

நேற்று இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமான முறையில் 117 ஆமை முட்டைகளைத் தன்வசம் வைத்திருந்த ஒருவரரை கைது செய்துள்ளனர்.கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.இவ் சம்பவமானது,சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் இந்த 117 முட்டைகளையும் கொண்டு சென்றுகொண்டிருந்த போதே கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளார்.இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர் திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் ஆமை முட்டைகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சேருநுவர வனஜீவிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கக் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660