தர்மபுரம் பகுதியில் கட்டளையை மீறிய லொறிக்கு பொலிஸார் துப்பாக்கிச் சூடு
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இன்று (01) அதிகாலை, கட்டளையை மீறிச் சென்ற லொறி ஒன்றை நிறுத்த முயன்ற பொலிஸாருக்கு எதிராக அதனை இயக்கியவர் ஓட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ் சம்பவம் தர்மபுரம் பகுதியில் வேகமாக பயணித்த அந்த லொறியை வீதித் தடையில் நிறுத்தி சோதனை நடத்த முயன்ற பொலிஸார் சமிக்ஞையையும் பின்பற்றாமல் லொறி நகர்ந்ததால், அதன் சில்லுகளை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் சந்தேகநபரான சாரதி அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கிறார்கள், மேலும் அந்த லொறியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்றிருந்தது, எனவும் பொலிஸார்தெரிவித்தனர். மேலும்
தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்யும் நோக்கில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.