உள்நாடு
Feb 02, 2026
அருட்காட்சியில் மெய்மறந்த பக்தர்கள் நல்லூர் தைப்பூச விழா
வரலாற்றுப் பெருமை வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருநாளை முன்னிட்டு நடைபெற்ற விசேட வழிபாடுகள் நேற்று (01) மிகுந்த பக்தி பூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.மாலை நேரத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்றது. இதன்போது, வள்ளி மற்றும் தெய்வானை சமேதராக வேல் பெருமான் திருமஞ்சத்தில் எழுந்தருளி, திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
இந்த நிகழ்வின்போது ஆலய வளாகம் முழுவதும் ஆன்மிக சூழல் நிறைந்து காணப்பட்டதுடன், தைப்பூச திருநாளை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள் ஆராதனைகளில் ஈடுபட்டனர்.