உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி இலங்கையில் தங்க விலை குறைவு
உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமை ஒப்பிடுகையில் சுமார் 200 அமெரிக்க டொலர் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வௌ்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,889 அமெரிக்க டொலர் இருந்த நிலையில், இன்று (பிப்ரவரி 2) அது 4,687 டொலருக்கு குறைந்துள்ளது.
இத்தகைய உலக சந்தை நிலவரத்திற்கேற்ப, இலங்கையிலும் தங்க விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு செட்டியார் தெருவில் இன்று காலை பதிவான விற்பனை நிலவரப்படி, ஒரு பவுன் தங்கத்தின் விலை 12,000 ரூபாய் வரை குறைந்துள்ளது.
அதனைவிட, 22 கரட் தங்கம் இன்று ஒரு பவுனுக்கு ரூ. 338,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், 24 கரட் தங்கம் ஒரு பவுன் ரூ. 368,000 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.இவ் விலையானது கடந்த வௌ்ளிக்கிழமை 24 கரட் தங்கம் ரூ. 380,000 க்கு விற்பனை செய்யப்பட்டதை ஒப்பிடுகையில் குறைந்த விலைதான்.மேலும்
இவ் நிலவரம் தங்க சந்தையில் தொடர்ந்த பரபரப்பையும், பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் பிரதிபலிக்கிறது.