மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் நீண்ட நாட்களின் பின் குழந்தை பிரசவம்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்.
மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் மிக நீண்ட நாட்களாக செயற்படாமல் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட மகப்பேற்று பிரிவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி றிஸ்வியா சஜ்ஜாத் தெரிவித்தார்.
மிக நீண்டகாலமாக மகப்பேற்று பிரிவு மூடப்பட்டிருந்த நிலையில் பொறுப்பு வைத்திய அதிகாரி றிஸ்வியா சஜ்ஜாத் பொறுப்பேற்றதன் பின் வைத்தியசாலையின் அபிவிருத்தியில் எடுத்து வரும் அயராத முயற்சியினால் மகப்பேற்று பிரிவு அண்மையில் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், வைத்தியசாலையின் பெளதீக வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து இப் பிரதேச மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கும் நோக்கில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நெறிப்படுத்தலோடு பல்வேறு முயற்சிகளை அவரும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அறுவடையாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை)ஆண் குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.