சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களைப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சமீபத்தில் 2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை தரவிறக்கம் செய்வது மற்றும் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தனியார் விண்ணப்பதாரர்கள் தமது அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk மூலம் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து திருத்தங்களை செய்ய வேண்டும்.இந்தத் திருத்தங்களை மேற்கொள்ளும் கால அவகாசம் 2026.02.10 அன்று நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடைகிறது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, இந்தத் திகதி மீண்டும் நீடிக்கப்படமாட்டதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் பரீட்சை விவரங்கள்:

சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் தேதி: 2026 பிப்ரவரி 17 முதல் 26 வரை

பரீட்சை நிலையங்கள்: நாடு முழுவதும் உள்ள 3,545 பரீட்சை நிலையங்கள்

பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன: வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பாடசாலை தலைமை அதிகாரிகள் மூலம்

தனியார் விண்ணப்பதாரர்கள் அனுமதிப்பத்திரங்களை தங்கள் தனிப்பட்ட முகவரிக்கு தபால் வழியாக பெறுவர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதிப்பத்திரங்களில் திருத்தங்களை செய்ய Username மற்றும் Password பயன்படுத்தி இணையதளத்தில் பணிகளை செய்ய வேண்டும்.

மேலதிக தொடர்பு விவரங்கள்:

உடனடி அழைப்பு இலக்கம்: 1911

தொலைபேசி: 0112784208, 0112784537

பெக்ஸ்: 0112784422

மின்னஞ்சல்: gceolexamsl@gmail.com

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660