புத்தபெருமானின் புனித சின்னங்கள் இலங்கைக்கு கங்காராம விகாரையில் விசேட தரிசனம்
இந்தியாவிலிருந்து புத்தபெருமானின் புனித சின்னங்கள் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.இந்த புனித சின்னங்கள் கொழும்பு கங்காராம விகாரையில் இம்மாதம் 5ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரிசிக்கக் கூடிய வகையில் வைக்கப்படவுள்ளன.
இதனை முன்னிட்டு, கங்காராம விகாரையைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் அதன்படி, குறிப்பிட்ட தினங்களில் விகாரையை அண்மித்த பல வீதிகள் தற்காலிகமாக போக்குவரத்துக்கு மூடப்படுவதுடன், கனரக வாகனங்களின் இயக்கமும் கட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மாற்று வீதி வழித்தடங்களை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.