வீதியோரமாகச் சென்ற மாணவிக்கு ஏற்பட்ட துயரம்,எலபாத்த பகுதியில் விபத்து
எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கானதோல இலுக்குதென்ன வீதியில் இடம்பெற்ற துயரமான வீதி விபத்தில், பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவ் விபத்தானது நேற்று (06) நண்பகல், கானதோல இலுக்குதென்ன வீதியின் இலக்கம் 79 ரப்பர் தோட்டத்திற்கு அருகிலுள்ள பகுதியில், வீதியோரமாகச் சென்று கொண்டிருந்த மாணவியை லொறி ஒன்று மோதி ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மாணவி உடனடியாக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக பொலிஸ் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
உயிரிழந்த மாணவி அலகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் லொறி சாரதியை சந்தேகநபராகக் கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.