உள்நாடு
Feb 07, 2026
மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று ராக்கெட் லோஞ்சர்கள் மீட்பு
மட்டக்களப்பு, குடும்பிமலை பகுதியில் கற்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் லோஞ்சர் வகை ஆயுதங்கள் 3 நேற்று (6) மாலை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை இராணுவப் புலனாய்வுப்பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ தினமான நேற்று (06) மாலை அரலகங்வில விசேட அதிரடிப்படையினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து குடும்பிமலை பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன் போது, கற்களுக்குள் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் லோஞ்சர் வகை ஆயுதங்கள் 3 கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.