கிண்ணியா பிரதான வீதிகளில் தெருநாய்கள் அதிகரிப்பு பொதுமக்கள் அச்சம்

கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் சமீப காலமாக தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கியமாக, பிரதான சாலைகளின் நடுப்பகுதிகளில் நாய்கள் கூட்டமாகத் திரண்டிருப்பது வாகன ஓட்டுநர்களுக்கு கடுமையான சவாலாக மாறியுள்ளது. திடீரென சாலையை குறுக்கே கடக்கும் நாய்கள் காரணமாக பல சிறிய விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இரவு நேரங்களில் வேலை முடிந்து வீடு திரும்பும் மக்கள் மற்றும் பாதசாரிகள் நாய்களின் அச்சுறுத்தல் காரணமாக சாலைகளில் பயணிக்க தயக்கம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலைமைக்கு உடனடி தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கும் அவற்றின் வீதி நடமாட்டத்தை குறைப்பதற்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660