உள்நாடு
Feb 08, 2026
நாளை முதல் தபால் சேவை கட்டணங்களில் புதிய மாற்றம்
நாளை (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் தபால் கட்டணங்களில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த திருத்தத்தின் கீழ், குறைந்தபட்ச தபால் கட்டணம் 70 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளதாகவும், புதிய கட்டண அமைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால் சேவையின் செயல்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கவும், அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்கும் நோக்கிலும் இந்த கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.