இலங்கை மாணவர்களுக்கு உலக கல்வி வாய்ப்புகள் புதிய அரசுத் திட்டம்
கல்வித்துறையில் திறமையான மாணவர்களை உலகளாவிய கல்வி வாய்ப்புகளுடன் இணைக்கும் நோக்கில் கல்வி அமைச்சு புதிய புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அதிக Z-புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் உலகின் முன்னணி மற்றும் மதிப்புமிக்க சர்வதேச பல்கலைக்கழகங்களில் தங்கள் விருப்பத் துறைகளில் பட்டப்படிப்புகளைத் தொடரும் வாய்ப்பைப் பெறுவர்.இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 200 புலமைப்பரிசில்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகளுக்காக வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், திட்டத்தின் முதல் கட்டமாக 32 மாணவர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இது திறமையான மாணவர்களுக்கு சர்வதேச தரமான கல்வியை அணுகும் புதிய வாயிலாக பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சி, நாட்டின் அறிவுத் திறனை மேம்படுத்துவதுடன், எதிர்காலத்தில் திறமையான மனிதவளத்தை உருவாக்கும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.